கார்த்திகைக்கு பின் மழையில்லை என்பது கூற்று! தையிலும் மழை வந்த காரணத்தை நீ பிறந்தபோது தான் புரிந்து கொண்டேன்.. நீ மழையின் மகன் என நான் நம்பக் காரணமும் அதுவே.. எனை ஆளும் சிவனே நீ எனக்கே மகவாய் பிறந்தாயோ?
செவ்வாய், 12 ஜூன், 2012
வியாழன், 7 ஜூன், 2012
ஒவ்வொரு நாளும் ஒரு கவிதை
ப்ரிய மகனுக்கு,
எவ்வளவோ எழுத ஆசைபட்டே
இவ்வலைப்பூவை தொடங்கினேன்
ஒவ்வொரு நாளும் ஒரு கவிதை
ஒவ்வொரு இரவும் ஒரு கதை
இப்படி இன்னும் எவ்வளவோ, ஆயினும்
எதுவுமே எழுத முடியவில்லை இந்நாள் வரை
என் முகம் கண்டு மலரும் உன் முகமும்
என் குரல் கேட்டு இனம்கண்டு சிந்தும்
உன் பொக்கை வாய் சிரிப்பும்
காணும் ஒவ்வொரு முறையும்
ஆயிரம் கவிதைகள் தோன்றும் என்னுள்ளே
வார்த்தைகள் அற்ற மொழியில் நாம் பேசி மகிழ்ந்த
ஒவ்வொரு சம்பாஷனையும் ஒரு சிறுகதையே
இயல் இசை நாடகம் எல்லாம் காட்டுகிறாய்
உன் ஒவ்வொரு அசைவிலும் நீ
இத்தனை இருந்தும், எழுதிட நினைக்கையில்
எல்லாம் மறந்து உன் முகம் மட்டும் ஆடுது நினைவில்..
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

